Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் 55% அதிகரிப்பு

வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் 55% அதிகரிப்பு

சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் பத்திரங்களுக்கான வட்டி வருவாய் விகிதம் அதிகரித்ததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் 55.40 சதவீதம் அதிகரித்து, ரூ.17.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், வட்டி விகித உயர்வால், பத்திரங்கள் வெளியீடு மூலம் நிதி திரட்டுவது குறைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அக்டோபர் மாதத்துக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2025-26ம் நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத பிற நிதி ஆதாரங்கள் மூலம் வர்த்தகத் துறைக்குக் கிடைத்த கடன் ரூ.11.20 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டில் இது ரூ.17.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் வங்கிகள் வழங்கிய உணவு சாராத கடன் முக்கியப் பங்கு வகித்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், வங்கிகள் வழங்கிய கடன் ரூ.9.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.3.8 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. அதேநேரத்தில், வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் வெளியிட்ட கார்ப்பரேட் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி ரூ.1.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.30,000 கோடியாகக் குறைந்துள்ளது. 

சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் பத்திரங்களுக்கான வட்டி வருவாய் விகிதம் அதிகரித்ததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் நிறுவனங்கள் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவதைவிட வங்கிக் கடன்களை அதிகம் நாடியுள்ளன.

கடந்த ஆகஸ்டில் தொழில் துறைக்கான வங்கிக் கடன் கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 18.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் 31.8 சதவீதமும், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் 23 சதவீதமும், பெரிய தொழில் நிறுவனங்களுக்கான கடன் 14.9 சதவீதமும் அதிகரித்துள்ளன.

இதே போன்று, சேவைத் துறைக்கான கடன் கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 24.30 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதில் கப்பல் போக்குவரத்துத் துறைக்கான கடன் 25.6 சதவீதமும், கணினி மென்பொருள் சேவைகளுக்கான கடன் 41.8 சதவீதமும் அதிகரித்துள்ளன.

மேலும், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலும் கடன்களுக்கான தேவை வலுவாக இருக்கும் என வங்கிகள் எதிர்பார்க்கின்றன. இதற்கான எதிர்பார்ப்பு நிகரக் குறியீடு 43.30 ஆக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
பருத்தி இறக்குமதி வரி விலக்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
அடுத்த செய்தி
அமெரிக்கப் பங்குச் சந்தை கடும் சரிவு

தொடர்புடைய செய்திகள்